151
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி சென்றவர்களுக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் வெதுப்ப உற்பத்தி பொருட்கள் விற்பனை வாகனங்கள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது, உரிய முறையில் வாகனத்தை பேணத் தவறியமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, மருத்துவ சான்றிதழ் கொண்டிராமை போன்ற செயற்படுகளுக்கு எதிராக நான்கு உரிமையாளர்களுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு இன்றையதினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று தலா 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது
#Jaffna #FoodSafety #PublicHealth #HealthInspection #HygieneStandards
Spread the love

