176
ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள துவாப்ஸ் (Tuapse) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் (Drone) தாக்குதலால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் 28 அன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அண்மையிலுள்ள கட்டிடங்களிலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரோஸ்நேப்ட் (Rosneft) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் சுத்திகரிப்பு நிலையம், முக்கியமாக ஏற்றுமதிக்கான எண்ணெய் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாத இறுதியில் (ஏப்ரல் 16 முதல் உத்தியோகபூர்வமாக நிறுத்தம்) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து இதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதுடன், தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இத்தகைய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

