223
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (drones) மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள் தென்பட்டதை அடுத்து, ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை இடைமறித்துத் தாக்குதல் நடத்தியுள்ளன. தலைநகரின் மேற்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வான் பாதுகாப்புத் துப்பாக்கிகள் இயங்கும் சத்தம் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வான் பாதுகாப்பு நடவடிக்கை சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும், தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவுடனான போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் தனது வான் பாதுகாப்பை உச்சகட்ட தயார் நிலையில் வைத்துள்ள நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த ட்ரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டன என்பது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இது ஒரு சோதனை நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
Spread the love

