Home இலங்கைதையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பிரதேச சபை வீதி உடனடியாக விடுவிக்கப்பட்ட வேண்டும் – தவிசாளர் எச்சாிக்கை

தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பிரதேச சபை வீதி உடனடியாக விடுவிக்கப்பட்ட வேண்டும் – தவிசாளர் எச்சாிக்கை

by admin

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் எனவும் , இல்லையெனில் அவை பிரதேச சபையினால் அகற்றப்படும் என பிரதேச சபையினால் விகாரதிபதிக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதி காணப்படுகிறது. குறித்த வீதியினை கடந்த 28ஆம் திகதி தவிசாளர் அடையாளம் காட்டி. அதனை நில அளவையாளர்கள் அளந்து வீதியினை குறித்து இருந்தனர்.
இந்நிலையில் , பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியினை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரினால் , விகாரதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில்,
வலிகாமம் வடக்குப் பிரதேசசபையின் உரித்துடமைக்கு உட்பட்ட தையிட்டி  பவானி வீதியைத் தடைசெய்து தாங்கள்  எல்லையிட்டுள்ளீர்கள். எனவே, அந்த எல்லையை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் அகற்ற வேண்டும் என்று தங்களுக்கு 1987ஆம் ஆண்டின 15ஆம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(1) பிரிவுக்கு அமைவாக இத்தால் அறிவித்தல் வழங்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த வீதியை சேர்த்து எல்லையிட்ட இடப்பரப்புக்கான உறுதிகளையும் ஆவணங்களையும் பரிசீலனைக்காக வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். தவறும் பட்சத்தில் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேசசபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(2) பிரிவுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தாங்கள் எல்லைகளை அகற்ற மறுத்து, அவை பிரதேசசபையால் அகற்றப்படும் பட்சத்தில், அதனால் ஏற்படும் செலவு தங்களிடம் இருந்து அறவிடப்படும். அத்துடன், தாங்கள் சட்ட நடவ டிக்கைக்கு உட்படவும் நேரிடலாம் என் பதையும் அறியத் தருகின்றேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த கடிதத்தின் பிரதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், பலாலி  காவல்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.
இதேவேளை, வவி.வடக்கு பிரதேச சபையின் நேற்றைய மாதாந்த அமர்வில் இந்த விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.  தவிசாளரின் நட வடிக்கைக்கு தேசிய மக்கள் சக்தியினர் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் தமது முழுமையான ஆதரவை வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

#PavaniRoad #ValikamamNorth #PradeshiyaSabha #IllegalEncroachment #PublicRoad #LegalNotice #Jaffna #LandDispute

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More