234
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் படுகொலை வழக்கின் மரண விசாரணை எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என நீதவான் திகதியிட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையின் மூத்த விரிவுரையாளர் தயாளினி திலீபன் படுகொலை வழக்கு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து , மரண விசாரணைகளை எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ள திகதியிட்ட மன்று , சான்று பொருளாக மீட்கப்பட்ட , விரிவுரையாளரின் நகை மற்றும் கார் என்பவற்றை மகனிடம் கையளிக்க உத்தரவிட்டது. அதேவேளை சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் மன்று உத்தரவிட் டது.
#JaffnaUniversity #MurderCase #CourtHearing #Jaffna #Investigation #ThayahiniDileepan
Spread the love

