Home இலங்கையாழ்.பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் சோதனை

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் சோதனை

by admin

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளை வெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர்.

உணவு வழங்குவோர் சுகாதார நடைமுறைகளை பின் பற்றுவதில்லை என முறைப்பாடுகள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நேற்றைய தினம் இரவு விடுதிக்கு உணவு விநியோகிக்கும் நபர்கள் , அவர்கள் விநியோகிக்கும் உணவு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதன் போது , சில குறைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் , அவற்றை விரைவில் நிவர்த்தி செய்யுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#JaffnaUniversity #FoodInspection #FoodSafety #HealthInspection #PublicHealth #StudentHostel #FoodHygiene

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More