Home இலங்கைமின்சாரக் கட்டணத் திருத்தம் – இன்று நேரடி கருத்துக்கேட்பு :

மின்சாரக் கட்டணத் திருத்தம் – இன்று நேரடி கருத்துக்கேட்பு :

by admin

 

இலங்கையில் 2026 ஆம் ஆண்டிற்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான மிக முக்கியமான பொதுமக்களின் வாய்மூலக் கருத்துக்கேட்பு நடவடிக்கைகள் இன்று (2026 மே 06, புதன்கிழமை) கொழும்பில் நடைபெற்று வருகின்றன. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வு, நுகர்வோர் மற்றும் மின்சாரத் துறை சார்ந்தோரின் கருத்துக்களை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இன்று காலை 08.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை  கொழும்பு ண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் BMICH),   இந்தக் கருத்துக் கேட்பு நடவடிக்கை இடம்பெறுகின்றது.   2026 ஆம் ஆண்டின் 2 ஆம் மற்றும் 3 ஆம் காலாண்டுகளுக்காக (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) முன்மொழியப்பட்டுள்ள கட்டண மாற்றங்கள் குறித்துப் பொதுமக்களின் நிலைப்பாட்டை அறிதலே இதன் நோக்கமாகும்.   இந்த விசேட கட்டணத் திருத்த முன்மொழிவு நேஷனல் சிஸ்டம் ஆப்பரேட்டர் (தனியார்) நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று  பொதுமக்களின் வாய்மூல ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டு  மே 09 (சனிக்கிழமை)  கருத்துக்கேட்பின் போது பெறப்பட்ட தரவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில், திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் குறித்த இறுதித் தீர்மானத்தை ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.

மின்சாரக் கட்டண நிர்ணய முறையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக இவ்வாறான பொதுக் கருத்துக்கேட்புகள் சட்ட ரீதியாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலை மாற்றம், மின் உற்பத்தி செலவு மற்றும் டொலரின் பெறுமதி  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டணத் திருத்தங்கள் முன்மொழியப்படுகின்றன.

இன்று BMICH இல் நடைபெறும் விவாதங்கள், நுகர்வோருக்குச் சுமை குறையுமா அல்லது மின்சாரச் சபை நட்டத்தில் இருந்து மீளுமா என்பதைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். மே 9 ஆம் திகதி வெளிவரவுள்ள அறிவிப்பு, நாட்டின் பொருளாதாரச் சூழலில் மின்சாரப் பாவனையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

#ElectricityTariff2026  #PUCSL  #PublicConsultation  #SriLankaEconomy #EnergyPricing

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More