Home இலங்கைகட்டுநாயக்கவில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கைது

கட்டுநாயக்கவில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கைது

டி-56 தோட்டாக்கள் மற்றும் மெகசீன் பறிமுதல்!

by admin

கட்டுநாயக்க பகுதியில் இன்று (2026 மே 06) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடிப்படையினரின் (STF) அதிரடிச் சோதனையில், பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் அதிநவீன ரகத் தோட்டாக்கள் மற்றும் மெகசீனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒரு முக்கியக் குற்றவாளியின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்ட நபரே இவ்வாறு சிக்கியுள்ளார்.

இன்று அதிகாலை. கட்டுநாயக்க, ஹீனட்டியன பகுதியில் கெஹெல்பத்தர விசேட அதிரடிப்படை (STF) முகாம் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது   மினுவாங்கொடை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா். சந்தேக நபரிடமிருந்து  54 டி-56 (T-56) ரகத் தோட்டாக்கள் மற்றும்  மெகசீன் (Magazine)  ஆகிய  பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, மீட்கப்பட்ட தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவை தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து கொண்டு இலங்கையில் குற்றச் செயல்களைத் திட்டமிடும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு (Organized Criminal) சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர், குறித்த குற்றவாளியின் உள்நாட்டுத் தொடர்புகளைப் பேணுபவராகவும், ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பவராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் திட்டமிட்ட கொலைகள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் உள்நாட்டு வலையமைப்பைச் சிதைப்பது இத்தகைய சோதனைகளின் முக்கிய நோக்கமாகும்.

கட்டுநாயக்கவில் பிடிபட்ட இந்த 25 வயது இளைஞர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க காவற்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மூலம், வெளிநாட்டுத் தொடர்புகளைக் கொண்ட ஏனைய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களையும் கைது செய்ய முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


#KatunayakeCrime #STF_Operation #UnderworldArrest  #AmmunitionSeized  #SriLankaPolice

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More