யாழ்ப்பாணம், நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய பிரம்மாண்டமான புத்தர் சிலை இன்று (2026 மே 11, திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது., தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பௌத்த மக்கள், நாகபூசணி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னரே சிலையினைத் திறந்து வைத்தனர்.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த பௌத்த மக்கள், முதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அம்மன் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து, பௌத்த சமய சம்பிரதாயங்களுக்கு அமைவான ஊர்வலத்துடன் விகாரையை நோக்கிப் பயணிகள் சென்றனர். 88 அடி உயரமுடைய இந்தச் சிலை நயினாதீவு கடலோரப் பகுதியில் மிகத் தெளிவாகத் தெரியும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் படகுச் சேவைகள் மூலம் நயினாதீவை வந்தடைந்த பௌத்த மக்கள், அங்குள்ள நாக விகாரையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளிலும் சிலை திறப்பு நிகழ்விலும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு தீவகப் பகுதியில் இன்று பெரும் மக்கள் கூட்டத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகக் கூடுதல் காவற்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

#NainativuTemple #BuddhaStatue #ReligiousHarmony #JaffnaNews #NagaVihara

