Home உலகம்வெனிசுலாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்:  

வெனிசுலாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்:  

by admin
வெனிசுலா நாட்டின் தலைநகரான கரகஸ் (Caracas) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை  இரு பெரும் நிலநடுக்கங்கள்  உலுக்கியுள்ளன. . 2026 ஜூன் 24 ஆம் திகதி மாலை 6 மணியளவில், சில நொடிகள் இடைவெளியில் இந்த இரு நிலநடுக்கங்களும் பதிவாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, முதலாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆகவும், அதனைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்குள் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆகவும் பதிவாகியுள்ளது. கரகஸ் நகருக்கு மேற்கே உள்ள மொரோன் (Morón) கடலோரப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பயங்கர நிலநடுக்கங்களின் அதிர்வுகள் தாங்காமல் தலைநகர் கரகஸ் மற்றும் அல்டாமிரா, லா குவைரா உள்ளிட்ட பல பகுதிகளில் அடுக்ககங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததை அடுத்து,   ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் தீவிரத்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கரகஸின் முக்கிய சர்வதேச விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நகரின் எரிவாயு விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். இந்த நிலநடுக்கம் வெனிசுலாவில் கடந்த ஒரு நூற்றாண்டில் பதிவான மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More