47
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 39 வயதுடைய ரகு துஷ்யந்தன் என்ற குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூன் 22ஆம் திகதி இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கம், எல்லை மீறி வன்முறையாக மாறியதில் இந்த கொடூர கத்திக்குத்துச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த துஷ்யந்தன், உடனடியாக மீட்கப்பட்டு யாழ். போதனா காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக காவல் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முடுக்கிவிட்ட வட்டுக்கோட்டை காவற்துறையினர், தாக்குதலை நடத்திய சந்தேகநபரை விரைந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் ஜூலை 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது நபர் உயிரிழந்துள்ளதால், இந்த வழக்கை காவற்துறையினர் கொலைக் குற்றச்சாட்டாக மாற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

