42
கிழக்கு மாகாண மூத்த துணை பொலிஸ்மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர, பாதாள உலக குற்றவாளி “கெஹெல்பத்தர பத்மே” என அழைக்கப்படும் மன்டினு பத்மசிறி உடனான தொடர்பு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவர் நேற்று (02.07.26) காலை 9.30 மணியளவில் CID அலுவலகத்திற்கு சென்று, சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் பின்னர், மதியம் 1.45 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
“கெஹெல்பத்தரைப் பத்மே”விடமிருந்து மீட்கப்பட்ட கைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்த CID, அதில் SDIG ஜயசுந்தருடன் 100க்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததை கண்டறிந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, அறிக்கை பதிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், “பத்மே” இந்தோனேசியாவில் இருந்தபோதே இந்த தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. “பத்மே” கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது CID காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விபரங்களை CID இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விசாரணை தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love

