177
பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது. இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பாராளுமன்ற பார்வையாளர் கலரியில் இன்று ஊடகவியலாளர்களைத் தவிர ஏனையோர் குறித்த பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love