Home இலங்கைகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்று (14) கரைச்சி பிரதேச சபையில் விசேட அமர்வில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் காலை ஒன்பது முப்பது மணிக்கு சமர்பிக்கப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் ஒரு மணி முப்பது நிமிடங்கள் வரை இடம்பெற்றது.

பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் போது தவிசாளர் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் பதினொரு பேரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரும் என பதினான்கு பேரும் வாக்களித்தனர்.

இதனால் மேலதிக நான்கு வாக்குகளால் 2019 ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More