மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டி வெளி – பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்ததும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான புனித கர்த்தர் சொரூபம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இனம் தெரியாத நபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த வீதியூடாக கரோல் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் அவ் வீதியூடாக பங்கு மக்கள் சென்று கொண்டிருந்த போதே இந்த சொரூபம் உடைக்கப்பட்ட நிலையில் ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை ச.சத்தியராஜ் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பங்குத்தந்தை நிலமையை பார்வையிட்டதோடு,மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரியப்படுத்தியதோடு, அடம்பன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்த நிலையில் இன்று புதன் கிழமை (26.12.18) காலை சம்பவ இடத்திற் சென்ற அடம்பன் காவற்துறையினர் விசாரனைகளை மேற்கொண்டனர். பின்னார் விசேட தடவியல் நிபுனத்துவ காவற்துறையினர் சென்று தந்து தடையங்களை பெற்றுக்கொண்டனர்.