Home இலங்கைமலையகத்தில் ஆலயம் உடைத்து பெறுமதிவாய்ந்த சிலை களவு

மலையகத்தில் ஆலயம் உடைத்து பெறுமதிவாய்ந்த சிலை களவு

by admin

மலையகத்தின் தலவாக்களை சென்கிளயர் தோட்டத்தில் இந்து ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ளது. விநாயகர் ஆலயத்தில், 2 இலட்சம் ரூபா பெறுமதியான சிலை  திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் காலை ஆலயத்திற்கு பூசகர் வந்த வேளையிலேயே திருட்டு சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆலய நிர்வாகம் தலவாக்களை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
தடவியல் நிபுணர்கள், காவல்துறை நாய் முதலியவற்றின் உதவிகளுடன் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்று தலவாக்களை காவல்துறையினர் கூறுகின்றனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்து ஆலயங்கள்மீது தாக்குதல் மேற்கொள்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More