குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
திருட்டுக்களில் ஈடுபட்ட வந்த சிறுவனை ஒரு ஆண்டுக்கு அச்சுவேலியில் உள்ள அரச சீர்திருத்தப் பாடசாலையில் சேர்த்த மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
கோப்பாய் காவல்துறைப் பிரிவில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவனை; கைது செய்த கோப்பாய் காவல்துறையினர் திருட்டுப் போன பொருள்கள் சிலவற்றையும் மீட்டிருந்தனர்.
அந்தச் சிறுவனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அவரை ஒரு வருடத்துக்கு அச்சுவேலி அரச சீர்திருத்தப் பாடசாலையில் அனுமதித்து மறுவாழ்வு வழங்குமாறு உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.