திருகோணமலை இரக்கண்டியில், சந்தேக நபரொருவர் கைது…
திருகோணமலை இரக்கண்டி பகுதியில் வெடிபொருட்களுடன் சந்தேக நபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த நபரிடமிருந்து 51 வோட்டர் ஜெல் வெடிபொருள், 215 டெட்டனேடர்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினரால் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை நகரத்தில் இரண்டு பேர் கைது…
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் திருகோணமலை நகரத்தில் இரண்டு பேர் காவற்துறை விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்த சந்தேகநபர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் காவற்துறை விஷேட அதிரடிப் படையினரை கண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியாவில் ஒருவர் கைது..
மஸ்கெலியா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து 49 கத்திகளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை, மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில் சவூதியைச் சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான தோட்ட விடுதியொன்றிலிருந்து வோக்கிடோக்கிகள் சிலவும் வேறு உபகரணங்களும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #eastersundayattacklk #suspectarrested #trincomalee #maskeliya

