எந்த விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க தான் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐ.எஸ் பயங்கரவாதத்தை துடைத்தெறிவதற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதல் நடந்த அன்றைய தினமே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆன்டகையைச் சந்தித்து, தாம் உறுதி வழங்கியதாகவும் அன்று தொட்டு இன்று வரை இந்த பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்
மேலும் பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்றும் இவ்வாறான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை தாம் ஒருபோதும் முஸ்லிம்கள் என சொல்லப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#விசாரணைகளுக்கு #முகம் கொடுக்க #ரிஷாட் பதியுதீன் #மகாநாயக்க தேரர் #ஐ.எஸ்