Home இந்தியாஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்:-

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்:-

by admin

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், என பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் மேடை பகுதியில் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் விதித்த தடையால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள நிலையில் இந்த வருட பொங்கல் பண்டிகையின்போது நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினரும், காளை வளர்ப்போரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருவதுடன் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More