மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வெற்றுக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குருவாயூரில் இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பதுடன் ஆழ்குழாய் கிணறுகளிலும் போதுமான நீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
3 கி.மீ. தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்ற நிலையில் குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த குருவாயூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ; அந்த வழியாக வந்த பேருந்தொன்றையும் சிறைபிடித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
#திருமங்கலம் #வெற்றுக் குடங்களுடன் #பெண்கள் #சாலை மறியல் போராட்டம்