136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற நியதிகள் ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் பாராளுமன்றில் நிலையியற் கட்டளை மற்றும் நியதிகள் தொடர்பில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் எடுக்கும் பொறிமுறையில் இணைத்துக் கொள்ளக்கூடிய வகையிலும் ஜனநாயகத்தை உச்ச அளவில் உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love