ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான, அமெரிக்க ஓபன் தொடர் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரரான ரபேல் நடால், அஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்கொண்டு 6-3, 6-3, 6-2 என மூன்று செட்களையும் கைப்பற்றி 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அதேவேளை முன்னர் நடைபெற்ற மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ஒஸ்ரிய வீரர் டொமிக் தியமை, தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் இத்தாலி வீரர் தாமஸ் பேபியானோ, 6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்கஓபன் டென்னிஸ் #நடால்