204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்னவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.நிதி மோசடியில் ஈடுபட்டதாக சரத் குமார குணரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி நிதியில் சுமார் 12 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சரத் குமாரவை எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 2ம் திகதி சரத் குமார கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love