Home இலங்கையாழ்.கொடிகாமத்தில் வரையப்பட்டிருந்த சுவரோவியத்தில் கழிவோயில் வீசப்பட்டுள்ளது….

யாழ்.கொடிகாமத்தில் வரையப்பட்டிருந்த சுவரோவியத்தில் கழிவோயில் வீசப்பட்டுள்ளது….

by admin

யாழ்.கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியம் மீது இனம் தெரியாதோர் கழிவோயில் ஊற்றியுள்ளார்கள். நாட்டை தூய்மைப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பல தரப்பினர் ஆதரவை வழங்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொடிகாமம் பகுதியில் இளையோரால் வரையப்பட்ட சுவரோவியம் மீது நேற்று சனிக்கிழமை இரவு இனம் தெரியாதோர் கழிவோயில் ஊற்றி அதனை நாசம் செய்துள்ளனர்.

தாம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நகரை அழகூட்டும் முகமாக வரைந்த சுவரோவியத்தை விசமிகள் , தமது விசமத்தனமான செயற்பட்டால் நாசம் செய்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சுவரோவியத்தை வரைந்தவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் புலியின் படத்தை வரைந்தவர்களை புலனாய்வாளர்களும் காவற்துறையினரும் இணைந்து அச்சுறுத்தி அதனை அழிக்க வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More