Home இலங்கைஇலங்கையில் உல்லாச விடுதி உரிமையாளருக்கு திடீர் சுகயீனம்…

இலங்கையில் உல்லாச விடுதி உரிமையாளருக்கு திடீர் சுகயீனம்…

by admin


பண்டாரவளை, எல்ல பகுதியிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (22.03.2020) முற்பகல் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் வெளிநாட்டு பயணிகள் தங்குவார்கள் எனவும், இன்றும்  அங்கு இரண்டு அயர்லாந்து பிரஜைகள் தங்கியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்பகல் 10.30 மணியளவில் இவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சுகாதார பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை வழங்கினர். அதன்பின்னர் அவர் நோயாளர் காவு வண்டி ஊடாக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விடுதி உரிமையாளர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More