Home இலங்கைஎமது பாதுகாப்பையும் மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நாங்கள் தனித்திருப்போம்

எமது பாதுகாப்பையும் மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நாங்கள் தனித்திருப்போம்

by admin
கொரோனா தாக்கத்தினால் உலகம் முழுவதும் வாழும் மக்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.இவ் வேளையில் உங்கள் அனைவருக்கும் அச்சம் இருக்கலாம்.நீங்கள் பல வைகயிலும் துன்பப்படலாம்.இப்படியான ஒரு வேளையிலே நாங்கள் கட்டாயமாக பாதுகாப்புடன் வாழ வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
 மன்னார் ஆயர் இல்லத்தில்  இன்று (2) வியாழக்கிழமை   மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
 அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
எங்களை ஊரடங்குச் சட்டம் ஊடாகவும்,அறிவூறுத்தல்கள் வழியாகவும் வீட்டிலே இருக்குமாறு தெரிவிப்பதை நாங்கள் செவி மடுக்கின்றோம். அதற்கு எமது ஒத்துழைப்பை கொடுப்போம்.நாங்கள் தனித்திருப்பதும் எங்களை நாங்கள் பாதுகாப்புடன் வைத்திருப்பதும் மிகவும் அவசியமாக உள்ளது.
ஒருவரினுடைய தவறினாலே பல நபர்களுக்கு தொற்றக் கூடிய ஒரு வியாதி. ஆகையால் தான் உலகம் முழுவதும்  வெவ்வேறு நாடுகள்  வெவ்வேறு  விதத்தில் மக்களை தனித்து இருக்குமாறு கேட்கின்றார்கள்.
 நாங்களும் எமக்கு  வேவ்வேறு அவசியங்கள் இருந்தாலும் எமது வாழ்க்கை முறையிலே நாங்கள் அங்கும் இங்கும் செல்வது பழக்கமாக இருந்தாலும் நாங்கள் எமது மக்களுக்காகவும், எம்மை சூழ்ந்து இருப்பவர்களுக்காகவும் எமது நாட்டு மக்களுக்கு மாத்திரம் இன்றி இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்காகவும் எமது பாதுகாப்பையும் மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நாங்கள் தனித்திருப்போம்.
குறித்த நோயினை மற்றவர்களிடத்தில் எடுத்துச் செல்லாது இருக்க இக்காலத்தில் வாழுவோம். வழமையாக நாங்கள் ஆலயங்களுக்குச் சென்று செபிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தாலும், இந்த நேரத்தில் நாங்கள் உங்களிடம் அப்படியான பொது இடங்களுக்கும் செல்லாமல் இருங்கள் என கேட்க வேண்டியுள்ளது.
அதனை நாங்கள் விரைவில் முடித்துக் கொள்ளுவோம் என்ற அந்த எதிர்நோக்குடன் நாங்கள் இறைவனை பிரார்த்திப்போம். இத் தொற்று நோயை அடக்கி ஒடுக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வழியாக இவற்றுக்கு சரியான மருத்துவங்கள் கிடைக்கப் பெற்று குறித்த வைரஸ் தொற்றிற்கு விரைவில் முடிவு வர வேண்டும் என்று நாங்கள் எதிர் பார்க்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர்  மேலும் தெரிவித்தார். எமது பாதுகாப்பையும் மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நாங்கள் தனித்திருப்போம் #கொரோனா  #மன்னார்ஆயர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More