நாராஹெண்பிட்டி தாபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் நேற்று(27) மாலை அடையாளம் காணப்பட்டதனையடுத்து குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 60 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கடற்படை சிப்பாய்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவரும் நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்த அவர் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்பவர் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #நாராஹெண்பிட்டி #தனிமைப்படுத்தப்பட்டுள்ளது