Home இலங்கைஜீ.எஸ்.பி பெற்றுக்கொள்ள எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை – மஹிந்த சமரசிங்க:

ஜீ.எஸ்.பி பெற்றுக்கொள்ள எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை – மஹிந்த சமரசிங்க:

by admin

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கு 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவற்றில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அமுல்படுத்தப்பட வேண்டிய 27 பிரகடனங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரகடனங்கள் தவிர்ந்த வேறு எந்தவொரு நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சலுகையை பெற்றுக் கொள்வது சுலபமான காரியமாக அமையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More