Home இந்தியாஅசாமில் எண்ணெய் வயல்- பற்றி எரிகின்றது – 1600 குடும்பங்கள் வெளியேற்றம் – அறுவர் காயம்

அசாமில் எண்ணெய் வயல்- பற்றி எரிகின்றது – 1600 குடும்பங்கள் வெளியேற்றம் – அறுவர் காயம்

by admin

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் வயலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சுற்று வட்டாரங்களில் வசித்த 1600 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பக்ஜான் பகுதியில் ஒயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயலில் கடந்த 14 நாட்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து சிங்கப்பூரை சேர்ந்த எண்ணெய் வயல் நிபுணர்கள், நேற்று இந்த எண்ணெய் வயலை பார்வையிட்டு எரிவாயு கசிவை சரி செய்யும் பணியினை ஆரம்பித்திருந்த நிலையில். பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் எண்ணெய் வயலில் இருந்த அனைவரும் வெளியேறினர்.

தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சுமார் 1600 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் பல்வேறு வீடுகள் தீயில் கருகின. அருகில் உள்ள கிராமங்களுக்கும் தீ பரவிய நிலையல், இதுவரை 6 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓஎன்ஜிசியின் ஒரு தீயணைப்பு வீரரும் காயமடைந்துள்ளார்.

தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த எண்ணெய் வயலுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில், திப்ரு சைகோவா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் உயிரின பாதுகாப்பு பூங்காக்கள் அமைந்துள்ளன. விபத்தால் இவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது #அசாம்  #எண்ணெய்வயல்  #எரிகின்றது  #வெளியேற்றம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More