சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்தலுடன் தொடர்புடைய 1950-க்கும் அதிக முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அதில் இத்தகைய முறைப்பாடுகளே அதிகமெனவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேர்தலுடன் தொடர்புடைய 685-க்கும் அதிக முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக தேர்தல் முறைகேடு கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் பிரசாரங்களுடன் தொடர்புடைய 1460 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. #சுகாதார #தேர்தல்பிரசார #பப்ரல் #முறைப்பாடுகள்