Home இலங்கைதொண்டமனாறு பகுதியில் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு

தொண்டமனாறு பகுதியில் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு

by admin

தொண்டமனாறு மூன்று சந்தியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொண்டமனாறைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது -50) என்பவரே உயிரிழந்தார் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்துக்குள்ளானார்.
விபத்தில்படுகாயமடைந்த அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது வழியில் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. #தொண்டமனாறு #விபத்து #குடும்பஸ்தர் #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More