Home இலங்கைசட்ட விரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவியவர் இலங்கையர் கைது

சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவியவர் இலங்கையர் கைது

by admin

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக   ராமேஸ்வரம் மெரைன் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவா்கள் தனுஸ்கோடி  கடற்கரை ஓரத்தில்  நேற்று  வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது கம்பி பாடு  கடற்கரையில்  சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து  விசாரணை செய்தனர்.

இதன் போது குறித்த   நபர் இலங்கையின்  மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க (30) என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மேலும் பிடிப்பட்டவர் சிங்களம் பேசுவதால் இவர் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். #சட்டவிரோதமாக #தமிழகத்திற்குள் #இலங்கையர் #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More