குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஹெடிகல விமலசார தேரர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஆசனமொன்று அதுரலிய ரதன தேரருக்கு வழங்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரதன தேரர் கட்சியை விட்டு விலகி சுயாதீனமாக செயற்பட உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்புரிமையை ரதன தேரர் துறக்க வேண்டுமென, விமலசார தேரர் கோரியுள்ளார்.