Home இலங்கைகோண்டாவிலில் வீடுபுகுந்து கொள்ளையில் ஈடுபட்டோர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

கோண்டாவிலில் வீடுபுகுந்து கொள்ளையில் ஈடுபட்டோர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

by admin

கோண்டாவில் செபஸ்ரியன் வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து வீட்டில் உள்ளவரை காயப்படுத்தி 6 பவுண்  தாலிக்கொடியினை அபகரித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் யாழ் மாவட்ட .மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

கோண்டாவில் பகுதி  வீட்டில் நேற்று அதிகாலை வேளையில் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவரை கூரிய ஆயுதத்தினால்
 தாக்கி காயப்படுத்தி விட்டு வீட்டில் இருந்தவரின் தாலிக்கொடியினை அறுத்து தப்பி சென்றிருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டினை  யாழ் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பணிப்புரைக்கமைய மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் குறித்த விசாரணை ஒப்படைக்கப்பட்ட நிலையில்
 யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பு பிரிவின் காவல்துறை பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான காவல்துறை அணியினர் மேற்கொண்ட விசாரணையின்
அடிப்படையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த வீட்டில் இருந்து அபகரிக்கப்பட்ட தாலிக்கொடி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வீட்டு மலசல குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதோடு மற்றைய சந்தேக நபரின்  வீட்டிலிருந்து இரண்டு பெரிய வாள் மற்றும் 250 மில்லிகிராம்
ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

 கைது செய்யப்பட்டவர்கள் முதல்கட்ட விசாரணையின் பின்னர் யாழ்ப்பாண நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளார்கள் #கோண்டாவில் #கொள்ளை #கைது #தாலிக்கொடி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More