Home இலங்கைபிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

by admin


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபா் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாமல் வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் சூம் தொழில்நுட்பம் ஊடாக இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வாறு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளாா்

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய, பிரசாந்தன் மீண்டும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. #தமிழ்மக்கள்விடுதலைப்புலிகள் #பிரசாந்தன் #விளக்கமறியல் #ஆரையம்பதி #இரட்டைக்கொலை


Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More