நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றில் இருந்தும், வகித்த பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்றும் முன்னணியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் முன்னணியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நீக்கப்படுவதற்கானதீர்மானம், நேற்று மாலை நடைபெற்ற முன்னியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டதாக சங்கரன் விஜயசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.