Home இலங்கைசட்ட விரோதமாக தமிழகத்திற்கு சென்ற இரு இளைஞர்கள் கைது

சட்ட விரோதமாக தமிழகத்திற்கு சென்ற இரு இளைஞர்கள் கைது

by admin

இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்த மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை கைது செய்யப்பட்டனர். 


கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ பிரிவு மற்றும் மத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு கண்ணாடி இழை படகு மூலம்   இலங்கையைச் சேர்ந்த இருவர் சட்ட விரோதமான முறையில் வந்து இறங்கியதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில் இவர்கள் மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் நாதேஸ் என தெரிய வந்தது. இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஒருவர் வேலை தருவதாக கூறிய தங்களை தமிழகத்திற்கு வரவழைத்தாக  விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர். 


இதனையடுத்து இருவரையும் கைது செய்த மெரைன் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #சட்டவிரோதமாக #தமிழகத்திற்கு #இளைஞர்கள் #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More