Home இலங்கைபுலிகளை மீள உருவாக்க முயற்சி என குற்றச்சாட்டு நால்வர் கைது!

புலிகளை மீள உருவாக்க முயற்சி என குற்றச்சாட்டு நால்வர் கைது!

by admin

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலை காவற்துறைப் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி காவற்துறை பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More