Home பிரதான செய்திகள்சென்னை தொடா்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது

சென்னை தொடா்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது

by admin

 

சென்னை சூப்பர் கிங்ஸ்மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீா்மானித்து நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 172 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது சென்னைஅணி தொடா்ச்சியாக பெற்ற 5வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More