Home இலங்கையாழ்.நகர் மத்தியில் 50 பேர் கைது

யாழ்.நகர் மத்தியில் 50 பேர் கைது

by admin

யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 50 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் தலைமையக காவல்நிலைய பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறைரிசோதகர் பிரசாத் பெர்னான்டோவின் அறிவுறுத்தலில் சிறப்பு நடவடிக்கை இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீதிகளில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள், வியாபார நிலையங்களுக்குள் சென்ற காவல்துறையினர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேரைக் கைது செய்து பேருந்தில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களின் பெயர் விபரங்கள் பெறப்பட்டு விசாரணைகளின் பின்னர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான வழக்கு வரும் ஜூலை 21,22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்படும் என்று காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More