Home இலங்கைநீதிமன்ற தீர்ப்பிற்கு இடையே, துறைமுக நகர சட்டமூல விவாதம் ஆரம்பம்!

நீதிமன்ற தீர்ப்பிற்கு இடையே, துறைமுக நகர சட்டமூல விவாதம் ஆரம்பம்!

by admin



கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (19.05.21) ஆரம்பமாகி உள்ளது.

அதன்படி, இன்றும் நாளையும் (20.05.21) குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

விவாதத்தின் இறுதியில் நாளை பிற்பகல் வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவாதத்தினை அரம்பித்து வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முதலில் சபையில் உரையாற்றி உள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் நேற்று (18.05.21) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று பிற்பகல் விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், குறித்த சட்டமூலத்தை திருத்தத்துடன் நிறைவேற்ற அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More