யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சாவகச்சேரி , மீசாலை பகுதியை சேர்ந்த 68 வயதான முதியவர் இன்றைய தினம் திடீரென நோய் வாய்ப்பட்ட நிலையில் , வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து உயிரிழந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அவரது மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.