Home இலங்கையாழில் வீசும் காற்றினால் 46குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் வீசும் காற்றினால் 46குடும்பங்கள் பாதிப்பு!

by admin

யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். 
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 
மேலும் தெரிவிக்கையில், 

யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இதில் குழந்தை ஒன்று காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடுங்காற்றின்  தாக்கத்தின் காரணமாக இரண்டு வீடுகள் பெரும் சேதமடைந்துள்ளதோடு  42 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன்  சிறு தொழில்  முயற்சியாளர்கள் ஐந்து பேர்  காற்றின்  தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் 


குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் அனைத்து விவரங்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த  முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் 


வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவு  பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More