Home இலங்கை யாழ்.போதனாவில் கொரோனோ சிகிச்சை விடுதிகள் நிரம்பின – 129 நோயாளிகள் சிகிச்சையில்

யாழ்.போதனாவில் கொரோனோ சிகிச்சை விடுதிகள் நிரம்பின – 129 நோயாளிகள் சிகிச்சையில்

by admin

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 129 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளிலும் கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.


இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 129 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அங்கு அமைக்கப்பட்டு 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10 கோவிட்-19 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.
கோவிட்-19 நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் தினமும் 5 சடலங்கள் போதனா மருத்துவமனை சவ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 


யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் சீரான ஒழுங்கமைப்பில் தினமும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் சடலங்கள் கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More