Home சினிமாமுதன்முறையாக பா.இரஞ்சித் – இளையராஜா கூட்டணி?

முதன்முறையாக பா.இரஞ்சித் – இளையராஜா கூட்டணி?

by admin

அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.இரஞ்சித். அதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உள்ளாா்.

இந்தநிலையில் இவர் அடுத்ததாக முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்னும் படத்தை இயக்க உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பா.இரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திந்ததனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பா.இரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More