Home இலங்கைசட்டமா அதிபர் – வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை

சட்டமா அதிபர் – வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை

by admin

சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி  வசந்த கரன்னாகொட ஆகிய இருவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கடந்த 13ஆம் திகதியன்று அறிவித்திருந்தமையை சவாலுக்கு உட்படுத்தி, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் நால்வரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

2008, 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் 11 இளைஞர்கள் வௌ்ளை வான்களில் கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 14 ஆவது பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தொடர்ந்தும்
முன்னகர்த்தப் போவதில்லையென சட்ட மா அதிபர், மேன்முறையீட்டு
நீதிமன்றத்திற்கு கடந்த 13ஆம் திகதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More