Home இலங்கைகூலிக்கு யாசகம் பெற்றவர்கள் கைது

கூலிக்கு யாசகம் பெற்றவர்கள் கைது

by admin

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டது.

அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More