193
- உக்ரேனுக்கு எதிரான ரஷ்ய ராணுவ நடவடிக்கை: நேட்டோ கண்டனம்NATOCopyright: NATOஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்Image caption: ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்யுக்ரேன் மீதான ரஷ்யாவின் பொறுப்பற்ற தாக்குதல் பொறுப்பற்றது என, நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “எண்ணிலடங்காத மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது, சர்வதேச சட்டத்திற்கு எதிரான மிகக்கடுமையான விதிமீறல். யூரோ-அட்லான்டிக்கின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் இது உள்ளது” என தெரிவித்துள்ளார்.
- யுக்ரேனின் பல நகரங்களில் ரஷ்யா குண்டு மழைGetty ImagesCopyright: Getty Images
- கிழக்கு யுக்ரேனில் உள்ள சுவி (Chuguiv) பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் காட்சி.கிழக்கு யுக்ரேனில் உள்ள சுவி (Chuguiv) பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் காட்சி.யுக்ரேன் மீது எல்லை தாண்டி ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான ராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.எங்கு தாக்குதல்கள் நடக்கின்றன என்பது குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகி வருகின்றன
- யுக்ரேனில் சிக்கியுள்ள தமிழக மாணவி: மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கைGetty ImagesCopyright: Getty Images
- யுக்ரேனில் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லும் மக்கள்.
- யுக்ரேனில் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லும் மக்கள்.யுக்ரேன் நாட்டில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள பகுதியில் சிக்கியுள்ள கொடைக்கானல் மாணவியை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வசித்து வரும் ராஜ் மோகன் என்பவரின் இளைய மகள் அனுஷியா மோகன் யுக்ரேன் நாட்டின் தலைநகர் கீஃப்-ல் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார்.யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி தீவிரமடைந்துள்ளாதால், உணவு, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு கிடைக்கவில்லை என்பதால், தனது மகளையும் தனது மகளுடன் உள்ள இந்திய மாணவிகளையும் பத்திரமாக மீட்டு இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என அனுஷியா மோகனின் பெற்றோர் இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- யுக்ரேன் தலைநகருக்கு பயணம் செய்யாதீர்கள் – இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.Getty ImagesCopyright: Getty Images
- யுக்ரேன் தலைநகர் கீஃப்-ல் பிரார்த்தனை செய்யும் பெண் ஒருவர்.
- யுக்ரேன் தலைநகர் கீஃப்-ல் பிரார்த்தனை செய்யும் பெண் ஒருவர்.யுக்ரேன் தலைநகர் கீஃப்-ல் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “யுக்ரேனில் தற்போதைய நிலைமை மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. தயவுகூர்ந்து அமைதியைக் கடைபிடியுங்கள். வீடுகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என எங்கு இருந்தாலும், இடம்பெயரும் போதும் பாதுகாப்பாக இருங்கள்.யுக்ரேன் தலைநகர் கீஃப்-ஐ நோக்கி பயணிப்பவர்களும், கீஃப்-ன் மேற்கு பகுதிகளிலிருந்து பயணிப்பவர்களும் தற்காலிகமாக அங்கிருந்து தங்களுடைய நகரங்களுக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, மேற்கு எல்லை நாடுகளில் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுங்கள்.இதுதொடர்பான மேலதிக ஆலோசனைகள் உடனுக்குடன் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை: இதுவரை நடந்தது என்ன?Getty ImagesCopyright: Getty Images
- யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது.
- யுக்ரேனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கையை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதனை தொலைக்காட்சி உரை மூலம் அவர் அறிவித்தார். யுக்ரேன் விவகாரத்தில் அவர் அமைதி காக்க வேண்டும் என, ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்திய நிலையில் புதின் இவ்வாறு அறிவித்தார்.
- யுக்ரேன் ராணுவத்தை அங்கிருந்து அகற்றுவதே இந்த “சிறப்பு ராணுவ நடவடிக்கையின்” நோக்கம் என, புதின் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.
- யுக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றதாக செய்திகள் வருகின்றன. தலைநகர் கீஃப்-ல் கூட இத்தகைய தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
- “பரவலான தாக்குதல்” நடத்துவதாக ரஷ்யா மீது யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சர் குற்றம்சாட்டினார். இதனை நிறுத்த சாத்தியமான அனைத்தையும் ஐநா மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
- யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை கொல்லும் முன்தயாரிப்புடன் கூடிய போரை ரஷ்ய அதிபர் புதின் தேர்ந்தெடுத்துள்ளதாக, பைடன் தெரிவித்தார்.
- பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஐநா, நேட்டோ ஆகியவற்றின் தலைவர்களும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி: தமிழ்நாடு இல்லத்தில் உதவி முகாம் திறப்புtnhouse.tn.gov.in/websiteCopyright: tnhouse.tn.gov.in/website
- யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், யுக்ரேன் தொடர்பான தகவல்களை பெற டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் (பொதிகை இல்லம்) வரவேற்பறையில் உதவி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.தொடர்பு எண்: 011 21610286வாட்ஸ்அப் உடன் கூடிய செல்பேசி எண்: 9289516716மின்னஞ்சல்: [email protected]
- யுக்ரேனுக்கு புறப்பட்டுப் பாதி வழியில் திரும்பிய ஏயார் இந்தியா விமானம்இந்தியர்களை அழைத்து வர டெல்லியில் இருந்து யுக்ரேன் புறப்பட்ட ஏயார் இந்தியா விமானம் அங்கு நிலவி வரும் மோசமான சூழ்நிலையால் நடுவானிலேயே தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டது.ஏஐ 1947 என்ற எண் கொண்ட அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காலை 7:30 மணியளவில் யுக்ரேனிய தலைநகர் கீஃப்வுக்குப் புறப்பட்டது. புறப்பட்ட நேரத்தில் இருந்து ஆறரை மணி நேரத்தில் அது அங்கு சென்றிருக்க வேண்டும்.ஆனால், இரான் வான் பரப்பில் இருந்தபோது அந்த விமானம் திரும்பி தாயகம் வர முடிவெடுக்கப்பட்டது.கீஃப்வில் தொடரும் குண்டு மழை பொழிவைத் தொடர்ந்து யுக்ரேனின் வான் பாதை பயணம் மூடப்பட்டிருக்கிறது. இதையடுத்தே இந்திய விமானம் டெல்லிக்கு திரும்பி இருக்கிறது.BBCCopyright: BBCArticle share tools
BBC
Spread the love