Home இலங்கைகைவிசேடம் கொடுக்க மறுத்த வெளிநாட்டவர் மீது தாக்குதல்

கைவிசேடம் கொடுக்க மறுத்த வெளிநாட்டவர் மீது தாக்குதல்

by admin

தனக்கு கைவிசேடம்  தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். 
மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. 


வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் சிலருக்கு கைவிசேடம் வழங்கியுள்ளார். இதை கேள்வியுற்று மதுபோதையில் சென்றவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு தருமாறு கோரினார். 


இதன்போது கைவிசேடம் கொடுத்தவர் நாளை காலை வருமாறு கோரினார். இதன்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தாக்குதலால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More